பதவியில் இருந்து விலகிய அதிகாரிகள் தொடர்ந்தும் பயன்படுத்தும் அரச சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், உள்ளுராட்சித் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு இது தொடர்பான கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தமது பதவிக் காலத்தில் வழங்கப் பட்ட அரச சொத்துக்களை சிலர் சட்ட விரோதமாக பயன்படுத்துகின்றனர் என முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறான சொத்துக்களை உடனடியாக மீளப் பெற்றுக்கொள்வ தற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது. பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுமென ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது