2022 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தர பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், 2021 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர், மீண்டும் பரீட்சைக்குத் தோற்ற உத்தேசிக்கும் மாணவர்களுக்கும் அதற்கு விண்ணப்பிக்க விசேட சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 1911, 011 2784208, 011 2784537, 011 2786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.