விமானப்படையின் உதவியுடனேயே வெளியேறிய கோட்டா குழு

0
529

இலங்கை அரசியல் அமைப்புக்கு அமைய, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமும் தற்போதுள்ள அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவும், பாதுகாப்பு அமைச்சின் முழுமையான அனுமதியின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற விமானமொன்றை வழங்கியதாக இலங்கை விமானப்படைதெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு- குடியகல்வு மற்றும் சுங்க விதிகளுக்கு அமையவேஇ இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதற்கமையவே, ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் பாதுகாவலர்கள் இருவர் ஆகியோர் இன்று அதிகாலை 3 மணியளவில் மாலைத்தீவு செல்வதற்கு விமானம் ஒன்றை வழங்கியதாகவும் இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here