தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் “தொழிற்சங்க துறவி” என்று போற்றப்படுகின்றவருமான அமரர் வி.கே.வெள்ளையன் அவர்களின் 51 ஆவது நினைவு தினம் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் காலை 10 மணிக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் தலைமை பணிமனையில் விசேட பூஜை வழிபாடுகளும் அதனைத் தொடர்ந்து டிக்கோயா தோட்டத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவு தூபி அருகில் நினைவஞ்சலி நிகழ்வுகளும் இடம் பெற உள்ளன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின்
தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.