வீதியின் அவலத்தினால் தோட்ட குடியிருப்புக்களை விட்டு வெளியேறும் மக்கள்

0
233

அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட , நாகசேனை 475 F கிராம சேவகர் பிரிவில் உள்ள வலகா தோட்ட வீதியின் நிலைமே இங்கு காணொளியில் …. இவ்வீதி பல வருடகாலமாக சேதமடைந்துள்ளதுடன் இது பற்றி உரிய தரப்புக்கு அறிவித்து எவ்வித பயனும் கிடைக்க வில்லை என குறித்த தோட்ட மக்கள் தெரிவிக்க்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் வாழும் இப்பிரதேசத்தில் போக்குவரத்துக்காக இவ்வீதி மட்டுமே காணப்படுகின்றது.

நாகசேனை நகர பாலத்தில் இருந்து ஆரம்பிக்கும் இவ்வீதி பாலத்தில் இருந்து சரஸ்வதி. த.ம.வி பாடசாலை வரை ஓரளவு சீர் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேலுள்ள தோட்ட குடியிருப்புக்களுக்குச் செல்லும் பிரதான வீதி பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளது.

தோட்ட நிர்வாகமும் இவ்வீதியை தமது தேவைக்காக பயன் படுத்துகின்றபோதும் வீதியின் சேத நிலைமைக் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாதிருப்பதும் கவலைக்குறியதே… பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் என வலகா தோட்ட மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். வீதியின் நிலைமையினால் அங்கிருந்து பல குடும்பங்கள் தற்காலிக குடியிருப்புக்களைத் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் அவல நிலைமையே ஏற்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வாக்குககளை பெற்றுச் செல்லும் அரசியல் வாதிகள் தேர்தல் முடிந்தவுடன் அதுபற்றி கண்டுகொள்வதில்லையென வலகா தோட்ட மக்கள் விசனமடைகின்றனர். இது குறித்து அக்கரபத்தனை பிரதேச சபையோ அல்லது குறித்த தோட்டத்தின் மக்களின் வாக்குகளாலும் வெற்றிபெற்ற நுவரெலியா மாவட்ட அரசியல் வாதிகளும் அக்கறை கொள்வார்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here