ஹட்டன் நகரில் பிரபல ஹோட்டலில் இருவர் பகல் உணவு சாப்பிட்ட போது உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது.
இதன்காரணமாக ஹோட்டல் உரிமையாளருடன் குறித்த இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 119 க்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஹட்டன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததோடு , ஹட்டன் நகரசபை பொது சுகாதார பரிசோதகர் எஸ் .சௌந்தர்ராகவன் அவர்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அவரின் பரிசோதனையின் பின்னர் உணவு சட்டத்தை மீரிய குற்றச்சாட்டின் கீழ் ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக எதிர்வரும் 31 ம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன்.