100 வருட பூர்த்தியை முன்னிட்டு திறந்தவெளி பெட்மிடன் விளையாட்டு

0
267

இலங்கை பெட்மிடன் சம்மேளனம் அகில இலங்கையில் புதிதாக அறிமுகபடுத்தி வரும் ( Air Badminton) திறந்த வெளி பெட்மிடன் விளையாட்டை நுவரெலியா பெட்மிடன் (பூப்பந்தாட்டம்) சங்கத்தினர் நுவரெலியா விளையாட்டுக் கழகத்தின் 100 வருட பூர்த்தியை முன்னிட்டு திறந்தவெளி பெட்மிடன் விளையாட்டை நேற்று
வியாழக்கிழமை காலை நுவரெலியா விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பித்து வைத்ததனர்.

இவ்வைபவத்தில் மத்திய மாகாண பெட்மிடன் சங்கத்தின் தலைவரும் முன்னாள் நுவரெலியா மாநகர முதல்வருமான மஹிந்த தொடம்பேகமகே, நுவரெலியா விளையாட்டுக் கழக தலைவர் அருணசாந்த ஹெட்டியாராச்சி, முன்னாள் நுவரெலியா மாநகர பிரதி முல்வர் கே.சந்திரசேகரன் உட்பட கழகங்களின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here