திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறை வழங்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து வர்த்தக வங்கிகளும் கொழும்பு பங்குச் சந்தையும் அன்றையதினம் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 09ஆம் திகதி பௌர்ணமி (போயா) தினம் அனுஷ்டிக்கப்படுவதோடு, அன்றையதினம் பொது, வர்த்தக, வங்கி விடுமுறை தினமாக இருந்த போதிலும் அன்றையதினம் ஞாயிற்றுக்கிழமையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஒக்டோபர் 10ஆம் திகதி பொது விடுமுறை தினம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.