அட்டன் – நோட்டன் வீதியில் அமைந்திருக்கும் சுமார் 13 வான் கதவுகளைக் கொண்ட மிகப்பெரிய நீர்த்தேக்கமான காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், வான் கதவுகள் வழியே நீர் நிரம்பி இன்று வெளியேறுகின்றது.
சுமார் பத்து வருடங்களுக்கு பின்னர் இன்று வான் கதவுகள் வழியே நீர் வெளியேறுகின்றது. 2012 ஆம் ஆண்டின் பின்னர் குறித்த காலப்பகுதியிலிருந்து இடம்பெற்ற திருத்த வேலைகள் காரணமாக நீர் மட்டம் அதிகரித்தாலும் நீர்த்தேக்கத்திற்கு உட்புறமாக உள்ள சுரங்கப்பாதை வழியே நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது திருத்த வேலைகள் நிறைவடைந்துள்ளமையினால் வான் கதவுகள் வழியே நீர் வெளியேறுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
வீடியோ- எம்.கிருஸ்ணா