அரசாங்கத்துக்கு எதிராகக் காலிமுகத்திடலில் இடம் பெறும் போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 100 நாட்களை நிறைவு செய்தநிலையில் போராட்டத்தின் 100ஆவது நிறைவு நாளை காலிமுகத்திடல் போராட் டக்காரர்களும் மக்களும் கொண்டாடியதுடன்; ‘கோ ஹோம் ரணில்’ போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் போராட்டம் ஆரம்பமான பின்னர், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகினர். இந்நிலையில் அடுத்து ஆட்சிக்கு வரும் தலைவர் நாட்டை சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று போராட்ட களத்தி லுள்ள மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகத்தை மக் கள் முற்றுகையிட்டமையால் கோட்டா பய ராஜபக்ஷ அங்கிருந்து தப்பியோடினார். இதைத் தொடர்ந்து அவர் ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.