100 நாட்கள் செயல்முனைவின் 07 ஆம்  நாள் போராட்டம் அம்பாறை  மாவட்டத்தில்  இன்று இடம்பெற்றது.

“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 07 ம் நாள்   போராட்டம் இன்று (07.08.2022) ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளிப்  பிரதேசத்தில் இடம்பெற்றது.

இப் போராட்டத்தில் அம்பாறை  மாவட்டத்தினைச் சேர்ந்த மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், கிராமிய பெண்கள் குழுக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர் என 200  இற்கும்  மேற்பட்டோர்   கலந்து கொண்டனர்.

இவர்கள் வடக்கு  கிழக்கில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு    கௌரவமான உரிமைகளுடன் கூடிய  அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையை வேண்டி நின்றனர்.

மற்றும் 08ம் நாள்  போராட்டமானது வவுனியா  மாவட்டத்தில்    நாளை (08.08.2022) திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.