100 வருட பூர்தியை முன்னிட்டு  நுவரெலியாவில் ‘கிறவுண் கொல்ப்’ விளையாட் டு

0
372

நுவரெலியா விளையாட்டுக் கழகம் ஆரம்பித்து 100 வருட பூர்தியை முன்னிட்டு  ஜப்பான் நாட்டில் பிரசித்தி பெற்ற (Ground Golf) ” கிரவுண் கொல்ப்” விளையாட்டை இலங்கை “கிறவுண் கொல்ப் ” கழகத்தினர் நுவரெலியா விளையாட்டுக் கழக மைதானத்தில்” கிறவுண் கொல்ப்” விளையாட்டை   நேற்று  வியாழக்கிழமை  ஆரம்பித்து வைத்தனர்.

அத்தோடு கொல்ப் விளையாட்டு உப கரணங்களையும் நுவரெலியா விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கி வைத்தனர்.

இவ்வைபவத்தில் இலங்கை” கிறவுண் கொல்ப் கழகத்தின்” ஆலோசகரும் முன்னாள் நுவரெலியா மாநகர முதல்வரும் தற்போதய நுவரெலியா மாநகரசபை எதிர்கட்சி தலைவருமான மஹிந்த தொடம்பே கமகே,  இலங்கை விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் முன்னாள் நுவரெலியா மாநகர பிரதி முதல்வருமான கிருஸ்ணசாமி சந்திரசேகரன், நுவரெலியா  விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அருணசாந்த ஹெட்டியாராச்சி, பொதுச்செயலாளர் லசந்த ஹேரத் உட்பட கழகங்களின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

ரமணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here