1000 ரூபா சம்பளவுயர்வு ; வழக்கு இன்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி

0
315
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் வேதனமாக ரூபாய் 1000 வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தள்ளுபடி செய்யக்கோரி முதலாளிமார் சம்மேளனத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று மேல் முறையீட்டு நீதிமன்றத் தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு நாள் வேதனத்தை வழங்காத கம்பெனிகள் சட்டத்தின் பிரகாரம் குற்றம் இழைத்தவர்களாக கருதப்படுவார்கள்.
இத்தீர்மானத்தின் பிரகாரம் தற்போது வாழ்க்கைச் செலவு அடிப்படையில் வேதனத்தை உயர்த்திக் கோர இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை பீடம் தீர்மானித்துள்ள நிலையில், இது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் எம் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
CWC Media 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here