2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களை பதிவு செய்துகொள்வதற்கு வாக்காளர்களுக்கு எதிர்வரும 12ஆம் திகதி வரை சந்தர்ப்பம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு கிராம உத்தியோகத்தர் அலுவலகம், பிரதேச செயலகம், உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களில் உள்ள தேர்தல்கள் அலுவலகங்களில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தங்களின் பெயர்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசீலனை செய்து தமது பெயர் உள்ளடக்கப்படாதவிடத்து எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் வாக்காளர் இடாப்பில் தமது பெயரை சேர்த்துக்கொள்ள முடியும் என்றும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. கிராம உத்தியோகத்தரைச் சந்தித்து இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.