உலகெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற படம் அவதார்.   சுமார்,  12 ஆண்டுக்ளின் பின்னர்  இந்த படத்தின் இரண்டாம் பாகம் நாளை இன்று வெளியாகவுள்ளது.  

25 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டொலர்கள் வசூலைப் பெற்றது. அதுவரை வேறு எந்த திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது. 

முதல் பாகத்தைப்போல மிக சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.