நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், அந்நியச் செலாவணி பிரச்சினை காரணமாக அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தினமும் எரிபொருளை விநியோகிப்பதில்லை போதுமான அளவு கையிருப்பில் இருந்தாலும் அது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்