13 வயதான பாடசாலை மாணவியை, அச்சிறுமியின் வீட்டில் வைத்தே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 35 வயது நபர் கைது செய்யப்பப்பட்டுள்ளார்.

கலவான தெல்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலை தொழிற்சாலைகளுக்கு பச்சை கொழுந்துகளை சேகரிக்கும் மேற்படி நபர், சிறுமி தனியாக இருப்பதை கண்டு, அச்சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து, துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டடுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.