15.6 மில்லியன் டொலர் பெறுமதியான அரிதான மருந்துகள் அன்பளிப்பு

0
89
 ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ‘ஜன சுவய’ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு’ வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதோடு,இதன் பிரகாரம் இருதய நோய்களுக்கான இன்றியமையாத மருந்தான Recombinant Streptokinase (IP 1500000IU) என்ற தடுப்பூசிக்கு நாட்டில் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்திருந்தார்.
இது குறித்து மே 18, 2022 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
இந்நாட்டில் மேற்குறிப்பிட்ட மருந்துகளின் கையிருப்பு குறைவாக இருப்பதாகவும், முடிந்தால் “ஹுஸ்ம” திட்டத்தின் மூலம் குறித்த மருந்துகளை இறக்குமதி செய்து தாருமாறு பிரதமர் சவால் விடுத்த வன்னம் கோரியிருந்தார்.
இந்நாட்டிலுள்ள மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு எமக்கு உள்ளதோடு,முடிந்தவரை அதனை நிறைவேற்றுவதற்கு நாங்கள் தயாராகவும் உள்ளோம்.
இதன்படி குறித்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக முன்னெடுத்த முயற்சிக்கு பலன் சேர்க்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரின் நிறைவேற்று ஒருங்கிணைப்பாளர்  நயன வாசலதிலக அவர்களின் பூரண ஆதரவுடன், 15.6 மில்லியன் ரூபா ($42,840) பெறுமதியான Recombinant Streptokinase (IP 1500000IU) என்ற 4000 தடுப்பூசிகள் விசேட மருத்துவ நிபுணர் அன்வர் ஹம்தானிக்கு இன்று(06) நன்கொடையாக வழங்கப்பட்டன.
ரீகாம்பினன்ட் ஸ்ட்ரெப்டோகினேஸ் (Recombinant Streptokinase) என்பது வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையே ஒரு சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்ளும் இதய நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற இன்றியமையாது உதவும் ஒரு மருந்தாகும்.
வாழ்வாதாரத்துக்குப் போராடும் மக்களுக்கு சுகாதார ரீதியான நிவாரணம் வழங்குவதற்காக,ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், அங்கத்தவர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் “ஜனசுவய” செயற்திட்டமும் இணைந்து “ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து ஓர் மூச்சு” திட்டம் செயல்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here