1,560 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் நடுக்கடலில் மீட்பு

0
210

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கடத்தப்பட்ட சுமார் 1,560 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) பெறுமதியான 250கிலோ ஹெரோயின் போதைப்பொருளை இந்திய கடற்படையினரும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் குஜராத் பொலிஸாரும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரானிலிருந்து கொண்டுவரப்பட்ட 200கிலோ ஹெரோயினை நடுக்கடலில் வைத்து இலங்கை படகொன்றுக்கு மாற்ற முற்பட்ட போதே கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. முதல் சம்பவமாக கடற்றொழில் படகு மூலம் கொண்டு வரப்பட்ட 1200 கோடி ரூபா பெறுமதியான 200 கிலோ போதை பொருள் பாக்கெட்டுகளுடன் படகிலிருந்த ஈரானியர் 06 பேர். இந்திய கடற்படையினரும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாவது சம்பவமாக பாகிஸ்தானிலிருந்து கடத்தி வந்த 360கோடி ரூபா பெறுமதியான (இந்திய ரூபா) 50கிலோ ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது. ஹெரோயினையும், படகையும் குஜராத் பொலிசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

அத்தோடு கேரள மாநிலம் கொச்சி கடற்பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட சுமார் 1200கோடி ரூபா பெறுமதியான 200கிலோ ஹெரோயின் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஹெரோயின் பாகிஸ்தான் வழியாக ஈரான் நாட்டு படகில் ஏற்றப்பட்டு, இந்தியா மற்றும் இலங்கையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நடுக்கடலில் இலங்கை கப்பலுக்கு இந்த போதை பாக்கெட்டுகள் மாற்றப்படவிருந்த நேரத்தில் அவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் குமார் சிங் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களும், போதைப் பொருள் பாக்கெட்டுகளும் கொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பாகிஸ்தானிலிருந்து கடத்தி வந்த 360கோடி ரூபா (இந்திய ரூபா) பெறுமதியான 50கிலோ ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது. ஹெரோயினும், படகையும் பொலிசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடலோர காவல்படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிசார் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு படகை தடுத்து சோதனை செய்தனர். அப்போது அதில் 50கிலோ ஹெரோயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த பொலிசார் படகில் இருந்த 06பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த படகு பாகிஸ்தானை சேர்ந்த அல்சாகர் படகு என்பதும் அங்கிருந்து ஹெரோயினை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here