1700 ரூபா சம்பளவுயர்வு கோரி தலைநகரில் ஆர்ப்பாட்டம்

0
110

தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு சம்பந்தமாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை தீர்ப்பின் பின் கம்பனிகாரர்கள் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும், 1700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் பெருந்திரலான தோட்ட தொழிலாளர்கள் கொழும்பிற்கு படையெடுத்து தமது உரிமைக்காக போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் பம்பலப்பிட்டி விரட்ட வீதியில் அமைந்துள்ள பெருந்தோட்ட பயிர்ச்செய்கை காப்பகத்திற்கு முன்பாக (09.07.2024) காலை இடம்பெற்றது.

இதில் நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட நாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் கொழும்புக்கு விஜயத்தை மேற்கொண்டு போராட்டம் இடம்பெற்ற இடத்தில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த போராட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.பி. சக்திவேல் தலைமை தாங்கி நடத்தினார்.

இதன்போது போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஏ.பி.சத்திவேல் தோட்ட துறைமார்களும்,கம்பனிக்காரர்களும் தொழிலாளர்கள் வியர்வை சிந்தி உழைப்பதால் இலடைசக்கணக்கான சம்பளத்தை மாதாந்தம் பெறுகின்றனர்.

இவ்வாறு மக்களின் உழைப்பை சுரண்டி அவர்கள் இலட்சக்கணக்கில் சம்பளம் பெரும்போது இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் தோட்ட தொழிலாளர்கள் வாழ்வதற்கு 1700 ரூபாய் சம்பளத்தை கொடுக்க சில தோட்ட கம்பணிகள் மறுப்பது கண்டிக்கத்தக்கது.

எனவேதான் 1700 ரூபாய் சம்பளத்தை தர மறுக்கும் தோட்ட கம்பனிகளுக்கு எதிராக பாரிய போராட்டம் கொழும்பில் வெடித்தது என்றார்.

மேலும் பம்பலப்பிட்டி வஜிர வீதியில் இடம்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து
கொழும்பு தேசிய நூதனசாலையின் மும்பதாக அமைந்துள்ள இலங்கையின் பிரபல தொழில் அதிபரும், ஹேலிஸ் நிறுவன பங்குதாரரான தம்மிக்க பெரேரா வீட்டுக்கு முன்பாக 1700 ரூபாய் சம்பள உயர்வை வழங்கக்கோரி பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.

இதன் போது கோசமிட்ட மக்கள், 1700 ரூபாய் சம்பள உயர்வை வழங்க முடியாத இவர் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு எவ்வாறு நாட்டை கட்டியெழுபுவார் என்று கேள்வியெழுப்பினர்!.

மேலும் அமரர் ஆறுமுகம் தொண்டாமான் மும்மொழிந்த ஆயிரம் ரூபாய் சம்பளம் இப்போது அவரின் புதல்வர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்று கொடுத்தார்.

இவ்வாறு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்த கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் தற்போது 1700 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆகவே 1700 ரூபாய் அவரால் மாத்திரமே எங்களுக்கு சாத்தியமாகும் என்பதுடன், நிச்சயம் எங்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வானது கிடைக்கும் என்றும் அதனை அரசுடன் இனைந்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

-ஆ.ரமேஸ்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here