1700 ரூபா தொடர்பில் நீதிமன்ற உத்தரவு குறித்து அமைச்சர் ஜீவனின் விளக்கம்

0
201
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைகால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களினால் வர்த்தமாணியை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரனையில் இன்று(04) கலந்துக்கொண்ட நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இது தொடர்பாக ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்..
நீதிமன்றத்தை பொறுத்தவரையில் சட்ட சிக்கல் காணப்படுவதனால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நீதிமன்றம் கூறியிருக்கின்றது ஒரு மாத காலப்பகுதிக்குள் இந்த பிரச்சினைகளை முடிவிற்கு கொண்டுவருவதாக தெரிவித்த  அவர், மேலும் தொழிற்சங்க தலைமைகளும், அரசியல் தலைமைகளும் வெடி வெடித்து சந்தோசப்படாமல் முதளை கண்ணீர் வடிக்காமல் ஒற்றுமையாக இருந்தால் போதும்.
நாங்கள் சொல்வதையே செய்வோம், கடந்த 2020ஆம் ஆண்டு கூறியது போல் 1000ரூபாவினை பெற்றுக்கொடுத்தோம், தற்பொழுது ரூபா1700 யை பெற்றுத்தருவதாக கூறியிருந்தோம் அதனையும் பெற்றுக்கொடுப்போம்.
எங்களை பொறுத்த வரையில் முதல்சுற்றில் நாங்கள் வெற்றிப்பெற்றோம், இரண்டாவது சுற்றில் அவர்கள் வெற்றிப்பெற்றார்கள் ஆகவேதான் மூன்றாவது சுற்றில் நாங்கள் வெற்றிப் பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரனையில் இ.தொ.கா சார்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ .கா தேசிய அமைப்பாளர் சக்திவேல், சட்ட ஆலோசகர் மாரிமுத்து மற்றும் உபத் தலைவர் ராஜமாணி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here