1955 க்கு அழையுங்கள்

0
191

முறையற்ற வித்தில் பஸ் கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக 1955 என்ற எண்ணுக்கு அழைக்குமாறும்   நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தைவிட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பஸ் நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டண திருத்தத்திற்கு பின்னர் அதிக கட்டணம் வசூலிப்படுவதாக பல புகார்கள் வந்துள்ளதாகவும், தொலைபேசியில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். பஸ் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக நாடு முழுவதும் நடமாடும் பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here