2.5 மில்லியன் டொலர் செலுத்தப்படாததால் 3900 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பலில் இருந்து எரிவாயு இறக்கப்படாததால் அக்கப்பல் தொடர்ந்தும் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடந்த 8 ஆம் திகதி வந்த கப்பலே இவ்வாறு தரித்து நங்கூரமிட்டுள்தாகத் தெரிய வருகின்றது. மறு அறிவிப்பு வரும் வரை நுகர்வோர் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிவாயு நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

இந்த கப்பலுக்கு எரிவாயுவுக்கான டொலர் மற்றும் தாமத கட்டணத்துடன் எதிர்வரும் வியாழக்கிழமை வழங்கப்படும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.