20 வீதமான தனியார் பஸ்களே சேவையில்

0
180

டீசல் கிடைக்காததன் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 20 வீதமான அதாவது 5000 தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

நெருக்கடியான காலகட்டத்தில், மொத்த பேருந்துகளில் 50% (18,000) சேவையில் ஈடுபட்டது.தற்போது எரிபொருள் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

எரிபொருள், பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. 

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட  வரி திருத்தத்தின் காரணமாக விலை உயர்வை  சமாளிக்க கூடியதாக இல்லை. டயர்கள், டியூப்கள், லூப்ரிகண்டுகள், உதிரி பாகங்கள் மற்றும் இதர பாகங்க்ளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது.

எனினும் இரண்டாம் தவணை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களின் வசதிக்காக பல பேருந்துகளை சேவையில்  ஈடுபடுத்தியுள்ளோம் என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here