20 %மான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்

0
247

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனையில் 20 %மான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

வைத்தியசாலையின் குழந்தைகள் நல சிறப்பு வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமையே இதற்கு முக்கியக் காரணம் என விசேட வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் நாங்கள் கவனித்த சில விடயங்களால் இந்த பரிசோதனையை மேற்கொண்டிருந்ததாக வைத்தியர் தெரிவித்தார்.இதன்போது, கார்போஹைட்ரேட் , புரதம் உள்ளிட்ட குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களின் குறைப்பாடு அவதானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.சீஸ், பட்டர் போன்றவற்றை விட திரவ பால், முட்டை, சோறு மற்றும் பச்சை கீரைகளை உணவில் சேர்க்குமாறும், மஞ்சள் காய்கறிகளை பெற்றுக் கொடுக்குமாறும் வைத்தியர் குறிப்பிட்டார்.

கர்ப்பிணித் தாய்மார்களும் தங்களின் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here