2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

0
161

2022 ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதான பரிசு பெலாரஸ், யுக்ரைன் மற்றும் ரஷ்ய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேலாரஸை சேர்ந்த அலெஸ் பியாலியட்ஸ்கி (Ales Bialiatski ) , ரஷ்யாவின் மனித உரிமைகள் அமைப்பான ‘மெமோரியல்’ (Memorial )  மற்றும் யுக்ரைனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் சுதந்திரத்துக்கான மத்திய நிலையம் (Ukraine’s Center for Civil Liberties) ஆகியவற்றுக்கு வழங்கப்படுவதாக நோர்வேயின் நோபல் சமாதான பரிசுக்குழு அறிவித்துள்ளது.

ஏனைய துறைகளில் நோபல் பரிசுக்குரியவர்களை சுவீடன் நோபல் பரிசுக்குழு அறிவிப்பது வழக்கம். ஆனால், சமாதானத்துக்கான நோபல் பரிசை (Nobel Peace Prize  )  நோர்வேயின் நோபல் பரிசுக்குழு அறிவிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் சமாதானப் பரிசுககுரியவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் 10 மில்லியன் சுவீடிஷ் குரோனர் (சுமார் 9 லட்சம் அமெரிக்க டொலர்கள்= சுமார் 33 கோடி இலங்கை ரூபா, =  7.4 கோடி இந்திய ரூபா) எதிர்வரும் டிசெம்பர் 10 ஆம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவுள்ள வைபவத்தில் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here