21 பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப வசதி

0
200

சப்ரகமுவ மாகாணத்தில் 21 பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் தகவல் தொழிநுட்ப வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கென மேற்படி மாகாணத்தில 21 பாடசாலைகளுக்கு 800 மடிக் கணனிகள் (லெப்டப்) மற்றும் ஏனைய உபகரணப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகபடுவ தலைமையில் கடந்த புதன்கிழமை குருவிட்ட புஸ்சல்ல முகாமைத்துவ பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி மாகாணத்தில் கல்வி வளர்சியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் ஆங்கிலம், கணித பாடங்களை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதி பிரதான செயலாளர் ஆர்.ரஞ்ஜித், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுஜானி விஜேதுங்க, சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் சேபால குருப்பு ஆராச்சி உட்பட கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரஜித் ஸ்ரீ- இரத்தினபுரி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here