22 ஆவது அரசமைப்பு திருத்தத் வாக்களிப்புக்கு முன்னர் நடைபெற்ற பல சுவாரசிய தகவல்கள்…

0
276

*“யாராவது இதற்கு வாக்களிக்கவில்லை எனில் அதற்கு இரட்டைக் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளே காரணம். ஆகவே, அதனைப் பொருட்படுத்தாது வாக்களியுங்கள். அது எமது குடும்பப் பிரச்சனை. நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று சமல் ராஜபக்ச தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது அந்த தலையீடுதான் தீர்க்கமானதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

*பொதுஜன பெரமுனவில் உள்ள சிலர் எல்லாவற்றில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வெளிநாடு சென்றிருந்தனர். கடைசி நேரத்தில் சுகவீனம் என்று மற்றொரு குழு தெரிவித்திருந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

*நேரடியாக வாக்களிக்கப் போவதில்லை என்று சிலர் தெரிவித்திருந்தனர். சாகர காரியவசம், ஜயந்த கடகொட மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.

*ஒரு திருத்தம் காரணமாக கட்சிக்குள் மோதல்களை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை” எஸ்.பி.திசநாயக்கவின் இறுதி விளக்கம் சற்று நெகிழ்வாக இருந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

*தொடக்கத்தில் இருந்து நாமல் ராஜபக்ச முடிவு எடுப்பதில் குழப்பத்தில் இருந்தார். எவ்வாறாயினும், இறுதியில் நாமல் ராஜபக்ச 22-க்கு ஆதரவாக வாக்களிக் தீர்மானித்திருந்தார். அதற்கு சமல் ராஜபக்சவின் சித்தாந்தமும் ஒரு காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.

*22 ஆவது அரசமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அரச தலைவருக்கு அறிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பின்னர் அவரை அரச தலைவர் அழைத்ததாக திரை மறைவில் தெரியவருகின்றது.

*வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத 44 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 26 பேர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 8 பேர் அன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த போதிலும் வாக்களிக்க சபைக்குள் செல்லவில்லை. வாக்குகளைப் பயன்படுத்தாதவர்களில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் சேர்த்துக் கொள்ளப்பட்டமை தனித்துவமாக இருந்தது.

*அனைத்து அரசியல் மாற்றங்களுக்கு இடையில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரசன்ன ரணதுங்க கடந்த வாரம் ஓர் அற்புதமான அரசியல் காட்சியை நிகழ்த்தினார். தொடக்கத்தில் வெளிநாடு சென்ற அவர் பின்னர் அரச தலைவரின் அனுமதியுடனேயே வெளிநாடு சென்றதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here