இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர், எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

தகுதிச் சுற்றுக்குப் பிறகு மேலும் ஒரு அணி போட்டியில் இணையும். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது.

இலங்கையில் நடைபெற இருந்த இந்த தொடர் பின்னர் அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

ஆகஸ்ட் 27ஆம் திகதி ஆரம்பமாகும் முதல் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஆகஸ்ட் 28ஆம் திகதி துபாயில் நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து ஆகஸ்ட் 31ஆம் திகதி 6ஆவதாக தகுதியடையும் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.

சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி செப்டெம்பர் 11ஆம் திகதி துபாயில் நடைபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.