சுற்றுலாவிற்குச் சென்று வேனில் வீடு திரும்பும்போது வீதியில் சென்ற காட்டு யானை மீது வேன் மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை வேனை யோதா கால்வாயில் கவிழ்த்துள்ளது.
பொலன்னறுவை – பகமுனை வீதியில் இன்று (07) காலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 28 வயதுடைய தினேஷ் சந்தருவன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
யானை மீது வேன் ஆமாதியதன் காரணமாகவே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.