300 முச்சக்கர வண்டிகளை மின்மயமாக்க திட்டம்

0
221

இலங்கை எதிர்நோக்கும் பெற்றோலிய நெருக்கடிக்கு தீர்வாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் 300 முச்சக்கர வண்டிகளை மின்மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள தாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் தொடர்பான சட்டப் பின்னணியை தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொளளும் விசேட மாநாடு எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இத்திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here