3,500 பேக்கரிகளுக்கு பூட்டு ; 2 இலட்சம் பேர் வேலை இழப்பு

0
179

நாட்டிலுள்ள சுமார் 3,500 பேக்கரிகள் தற்போது மூடப்பட்டுள்ளன. பேக்கரி உற்பத்திகளின் விற்பனை சடுதியாக குறைவடைந்துள்ளதால் எதிர்காலத்தில் அவற்றின் விலையில் ஏற்படும் உயர்வினை தடுக்க முடியாது என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன  தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பாண் மற்றும் பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்வது குறைந்துவிட்டது. பேக்கரி உற்பத்தி தொழிலுடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பார்த்து வந்த சுமார் இரண்டு இலட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்.

எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 50 சதவீத பேக்கரிகள் செயல்படாமல் உள்ளன.

பேக்கரி உரிமையாளர்கள் வங்கிகளில் பெற்ற கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். பேக்கரி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத் தருமாறு பிரதமருக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here