நாட்டில் தற்போது மீண்டும் கொவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் , 4 ஆம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் காண்பிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது என ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள விசேட அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

17 மில்லியன் பேர் முதற்கட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் , 22 623 பேர் மாத்திரமே 4 ஆம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

நாட்டில் தற்போது 8 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அவற்றை எதிர்வரும் ஒக்டோபர் வரை உபயோகிக்க முடியும். அந்தக் காலப் பகுதிக்குள் இந்த தடுப்பூசிகளை முழுமையான பயன்படுத்த முடியாமல் போனால் அவற்றை வேறு நாடுகளுக்கு வழங்க வேண்டியேற்படும்.

எனவே, விரைவாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என மேலும்தெரிவித்துள்ளார்.