4 ஆம் திகதி முதல் ஆறு வருடத்துக்கு ஆளுநராகினார் நந்தலால்

0
187

மத்திய வங்கியின் ஆளுநராக மேலும் 6 வருடங்களுக்கு கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை 04ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நந்தலால் வீரசிங்கவிடம் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்க கடந்த ஏப்ரல் 07ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பதிக்காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறையில் பரந்த அனுபவமுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்றீடு நிறைவேற்றுப் பணிப்பாளராகவும், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளராகவும், உதவி ஆளுநராகவும், சிரேஷ்ட பிரதி ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here