நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 400 எரிபொருள் விநியோக நிலையங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டண முறைமையே இதற்கு காரணம் என சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தேவைப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 9.30 மணிக்கு முன்னதாக எரிபொருளுக்கான பணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிலைமையே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு பணம் செலுத்துவது கடினம். புதிய கட்டணம் செலுத்தும் முறையினால் எரிபொருள் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந் நிலைமையினாலே பல எரிபொருள் நிலையங்களில் இப்போது எரிபொருள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.