Update News – உயிருடன் மீட்ட சிறுத்தைப்புலி 45 நிமிடங்களில் பின்னர் உயிரிழந்தது – வீடியோ இணைப்பு

0
694

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா – வனராஜா சமர்வில், தோட்டப் பகுதியில் உயரமான மரமொன்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுத்தைப் புலி மீட்டு 45 நிமிடங்களில் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மரத்தில் தொங்கிய நிலையில் உயிருடன் இருந்த சிறுத்தைப்புலியை வனவிலங்கு அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய பொதுமக்களின் உதவியோடு அதனை மீட்க மரத்தின் கிளையினை வெட்டி மெதுவாக சீழ் இறக்கப்பட்டது.

எனினும் 45நிமிடங்களில் சிறுத்தை புலி உயிரிழந்துள்ளதாகவும் இந்த சிறுத்தை புலி ஆறு அடி நீளம் கொண்ட பெண் சிறுத்தை புலி யென நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுத்தை புலியின் இடுப்பு பகுதியில் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த வனவிலங்கு அதிகாரிகள் உடல் பிரேத பரிசோதனைக்காக ரந்தனிகலை மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எஸ்.சதீஸ்

 

முந்தைய செய்தி

https://news-in-lanka-3.local/வானராஜா-சமர்வில்-தோட்டப/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here