அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று (20) பதவியேற்கவுள்ளார். இலங்கை நேரப்படி அவர் இன்று இரவு 10.30 இற்கு பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதி பதவியேற்பு விழா வழக்கமாக அமெரிக்க பாராளுமன்றத்துக்கு அருகே பொது வெளியில் நடத்தப்படும் நிலையில், இந்த முறை கடும் குளிர் காரணமாக நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்படவுள்ளது.
ட்ரம்ப் பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் சீனா அதிபர் ஜின்பிங் சார்பில் துணை ஜனாதிபதி ஹான் ஜெங் கலந்துகொள்கிறார். அமெரிக்கா ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் சீன மூத்த அதிகாரி ஒருவர் கலந்து கொள்வது இதேமுதல் முறையாகும். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.
பதவியேற்பின் போது பல முக்கிய நிர்வாக ஆவணங்களில் அவர் கைச்சாத்திடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.