அட்டன் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்ஸில் டீசல் திருடியதாக சந்தேகத்தின் பேரில் மூவர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன்-எபேட்ஸிலி வீதியில் செல்லும் தனியார் பஸ்ஸிலேயே இவ்வாறு டீசல் களவாடப்பட்டுள்ள இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பஸ் உரிமையாளர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தனது பஸ் வண்டிக்கு சுமார் 140 லீற்றர் டீசல் நேற்று நிரப்பி வந்து நிறுத்திவைத்திருந்துள்ளார். இதன்போது, இரவு நேர வேளையில் குறித்த பஸ்ஸிலிருந்த இனந்தெரியாத சிலர் டீசல் தாங்கியிலிருந்து சுமார் 120 லீற்றர் வரையிலான டீசலை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு 120 லீற்றர் டீசலை களவாடியவர்கள் 100 லீற்றர் வரையிலான டீசலை பாவணைக்கு எடுத்து விட்டு மிகுதி 20 லீற்றரை வீடொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் அதுவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் எபோட்ஸிலி வீதியில் செல்லும் தனியார் பஸ் உரிமையாளர் உட்பட பிரதேச இளைஞர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.