50 சென்டிமீட்டர் நீளம் காதுடைய ஆட்டுக்குட்டிக்கு

0
288

பாகிஸ்தானில் பிறந்து 2 வாரங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 சென்டிமீட்டர் நீளம் கொண்ட காது இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராட்சி மாகாணத்தை சேர்ந்தவர் முகமது ஹசன் நரிஜோ. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், அவரது ஆட்டுப்பண்ணையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆடு ஒன்று குட்டியை ஈன்றுள்ளது. அந்த ஆட்டுக்குட்டியின் காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதை விட மிகவும் நீளமாக இருந்ததை கண்டு உரிமையாளர் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளார். அந்த ஆட்டுக்குட்டிக்கு சம்பா என பெயரிட்ட முகமது ஆட்டுக்குட்டியின் காது எவ்வளவு நீளமாக உள்ளது என அளவெடுத்துள்ளார்.

அதில் ஒவ்வொரு காதும் 19 இன்ச் நீளமாக அதாவது சுமார் 50 சென்டிமீட்டர் நீளமாகும். பிறந்து 2 வாரங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 சென்டிமீட்டர் நீளமான காது இருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த ஆட்டுக்குட்டியை பலர் சென்ற பார்வையிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here