ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி 6ஆவது முறையாக கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 3 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
171 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணியின் சார்பாக மொஹமட் ரிஸ்வான் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரமோத் மதுஷான் 4 விக்கட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.