6 கிலோ 800 கிராம் போதைப் பொருளுடன் நால்வர் பொகவந்தலாவையில் கைது

0
1383
6 கிலோ 800 கிராம் போதைப் பொருளுடன் நால்வர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் நேற்று(6) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பொகவந்தலாவை பிரதேசத்தை அண்மித்த தோட்டங்களிலுள்ள இளைஞர்களை இலக்கு வைத்து, இந்த போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, சந்தேகநபர்களின் வீடுகள், அவர்களின் வர்த்தக நிலையங்களை பொகவந்தலாவை பொலிஸாரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போதே பெறுமளவு போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

எம்.கிருஸ்ணா,எஸ் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here