குடிநீர் கட்டணங்களை செலுத்தத்தவறிய 60 அரசியல்வாதிகளின் குடியிருப்புக்களுக்கான விநியோகத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பல்வேறு பதவி நிலைகளில் உள்ள 60 அரசியல்வாதிகளின் நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

குறித்த அரசியல்வாதிகள் செலுத்த தவறிய குடிநீர் கட்டணங்களின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.

அமைச்சர்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் குறித்த பட்டியலில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய ஓய்வுபெற்ற அமைச்சர்களின் ஓய்வூதியத்தில் இருந்து நிலுவைத் தொகையை மீட்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.