600 கைதிகள் தப்பியோட்டம் : ஒருவர் பலி

0
241

வெலிகந்த, கந்தகாடு பகுதியில் உள்ள சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து சுமார் 600 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப் பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வளிக்கும் முகாம் ஒன்று அங்கு நடத்தப்பட்டு வரும் நிலையில், இரதரப்பினருக்கிடையில நேற்றிரவு அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்தே பலர் தப்பியோடியுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.. இன்று அதிகாலையே இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினருடன் பொலிஸார் இணைந்து தப்பியோடியவர்களை தேடி சோதனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here