மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையையடுத்து நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க நேற்று முற்பகல் 11மணி முதல் இன்று முற்பகல் 11மணி வரைக்கும் நடைமுறைக்கு வரும் வகையில் காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல்வேறு பிரதேசங்களுக்கும் இவ்வாறு மனுச அறிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் வாழும் மக்கள் நிலவும் சீரற்ற காலநிலையை கவனத்தில் கொண்டு மிகவும் பாதுகாப்பான வகையில் செயற்படுமாறும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் மாத்தறை கம்புறுப்பிட்டி, தெவிநுவர உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுத்தப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசங்களில் வாழும் மக்கள் மட்டுமன்றி வாகன போக்குவரத்துக் களின் போதும் முழுமையான அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது..