இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண்கள் கலந்து கொள்ளும் 65 கி.மீ.தூர சைக்கிளோட்டப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 12ம் திகதி நடத்தப்படவுள்ளது.
காஷ்மீரில் நடைபெற்ற இப்போட்டி பர்முல்லாவில் இருந்து காமன் அமன் வரை நடைபெறும். இந்திய இராணுவத்தின் காலாட்படைப் பிரிவு இதற்கான ஒழுங்குகளை செய்துள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் இவர், இந்தியாவின் மிக உயரத்தில் அமைந்திருக்கும் மோட்டார் பாதை எனக் கருதப்படும் 460 கி.மீ. நீளமான ஸ்ரீநகர் – கருதுங்லா பாதையில் தனியாளாக சைக்கிளில் பயணிக்கவுள்ளார்.
பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிப்பதும் சைக்கிள் சுற்றுலாவை பிரசித்தப்படுத்துவதுமே தனது நோக்கம் என இவர் தெரிவித்துள்ளார்.