நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

எரிபொருள் நெருக்கடிக்கு உடனடி தீர்வை முன்வைக்காவிட்டால் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுடில் ஜயரூக் தெரிவித்துள்ளார்.

போதியளவு எரிபொருள் இல்லாததால் தங்கள் தொழிலை தொடரமுடியாத நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.