90 நாட்களுக்கு பின்னர் மீண்டும் இன்று ஆரம்பம்

0
237

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் சுமார் 90 நாட்களுக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

இதற்கமைய நாளாந்தம் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய முடியுமென எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோல் என்பன பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் எதிர்வரும் 14, 16ஆம் திகதிகளிலும் டீசல் அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here