‘சாகித்ய ரத்னா’ விருது வென்ற ‘முதல் மலையகத் தமிழர்’ மூத்த படைப்பாளுமை தெளிவத்தை

0
465

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் ஊவா கட்டவளை எனும் தேயிலைத் தொட்ட கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றிய சந்தனசாமிக்கும் பரிபூரணம் அம்மையாருக்கும் 1934 ஆம் ஆண்டு பெப்ருவரி பதினான்காம் திகதி மகனாகப் பிறந்தவர் ஜோசப். மூன்று சகோதரர்கள் ஒரு சகோதரி என கத்தோலிக்க குழும்ப நுழலில் வளர்ந்த இறைநம்பிக்கை கொண்ட ஜோசப் தன் தந்தையையே குருவாகக் கொண்டு ஊவாகட்டவளை தோட்டத்துப்பள்ளியில் தொடக்க கல்வியை ஆரம்பித்தார்.

இரண்டாம் நிலை கல்விக்காக பதுளை செல்லவேண்டிய நிலையில் பேரந்து வசதிகள் இல்லாத காரணத்தால் தனது தந்தையின் பிறந்த ஊரான தமிழ்நாடு கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர் நிலைப் பள்ளியில் சிறிது காலம் கற்று மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென்பீட்ஸ் கல்லூரியில் சாதாரண தரம் வரை கல்விகற்றார்.

தனது தந்தையின் வழியில் தெளிவத்தை எனும் தேயிலைத் தோட்டத்து பள்ளியின் ஆசிரியராகவும் தோட்டத்து லிகிதராகவும் சமகாலத்தில் பதவியேற்ற ஜோசப் வாசிப்பிலும் எழுத்திலும் அக்கறை காட்டத்தொடங்கினார். கடும்பத்தினருக்கு தமிழ்நாட்டுத் தொடர்புகள் இருந்ததன் காரணமாக தமிழக சஞ்சிகைகளை வாசிக்க பழகியுதுடன் தமிழக சஞ்சிகைகளுக்கு எழுதவும் தொடங்கினார். அறுபதுகளில் தமிழகத்தில் வெளிவந்த உமா எனும் சஞ்சிகைக்கு அவர் எழுதிய ‘வாழைப்பழத் தோல்’ எனம் சிறுகதையே அவரது முதல் சிறுகதையாக பதிவாகிறது.

அதனைத்தொடர்ந்து இலங்கையின் முன்னணி தேசிய தமிழ் பத்திரிகையான வீரகேசரி நடாத்திய மலையக சிறுகதைப் போட்டியில் 1962, 1963, 1964 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக சிறுகதைக்கான முதற்பரிசு பெற்று இலங்கையில் சிறுகதை படைப்பில் பிரபலமானார். அதுவரை ஜோசப் என்றிருந்த அவரது இயற்பெயருடன் அவர் தொழில் செய்து வாழ்ந்து வந்த தெளிவத்தை எனம் பெயரும் ஒட்டிக்கொள்ள ‘தெளிவத்தை ஜோசப்’ எனும் இலக்கிய பெயருக்கு சொந்தக்காரனானார்.

1974 ஆம் ஆண்டு வீரகேசரியில் தொடராக வெளிவந்த ‘காலங்கள் சாவதில்லை’ எனும் புதினம் நூலாகவும் வெளிவந்து இலங்கை சாகித்ய மண்டல பரிசுக்கு பரிந்துரையானதேடன் நாவல் இலக்கியத்திலும் தன்னை அடையாளப்படுத்தினார். 1979 ஆம் ஆண்டு தெளிவத்தை ஜோசப்பின் முதலாவது சிறுகதை தொகுப்பான ‘நாமிருக்கும் நாடே’ வெளியானதுடன் அந்த ஆண்டு இலங்கை அரசின் தேசிய சாகித்ய விருதினையும் வென்றது. இதே சமகாலத்தில் தொழில் நிமித்தமாக பதுளை மாவட்டத்தில் இருந்து வெளியேறி இலங்கையின் தலைநகரமா கொழும்பில் குடியேறினார் தெளிவத்தை ஜோசப்.

21.10.2022 அன்று காலமான சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோஸப்பின் உடல் 22.10.2022 அன்று வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 23.10.2022 கொழும்பு -14, மாதம்பிட்டிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

மலையகத்தின் பதுளை மாவட்டத்தில் வசித்த போது மலையகத் தமிழ் மக்களின் வாழ்வியலை தன் படைப்புக்களால் அழகியல் உணர்வுடன் வழங்கிவந்த தெளிவத்தை ஜோசப் தலைநகரில் வாழத்தொடங்கிய பின்னர் மலையகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மானிடர்க்காகவும் ஒடுக்கப்படும் மக்களக்காகவும் தனது படைப்புகளை விரிவுபடுத்தினார். இனவாக தாண்டவம் எழுந்த கொழும்ப சூழலில் அவர் எழுதிய ‘குடைநிழல்’ (புதினம்) ‘நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’ (புதினம்) போன்றன இதற்கு சான்று.

படைப்பு இலக்கியங்களில் மாத்திரமல்லாது இலக்கிய ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்ட தெளிவத்தை ஜோசப் மலையக சிறுகதை வரலாறு எனும் தொடர் ஆய்வினை செய்து அதனை நுஸலாகவும் வெளிக்கொணர்ந்தார். இதற்காக 2000 ஆம் ஆண்டு இலங்கை அரச தேசிய சாகித்ய விருதினை ஆய்விலக்கியத்துக்காகப் பெற்றுக்கொண்டார்.

இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இலக்கிய பயணம் மேற்கொண்ட தெளிவத்தை ஜோசப் கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் சிறப்புரைகளை வழங்கியிருக்கிறார். எழுத்துத் துறைக்கு அப்பால் ஒரு ஆவண சேகரிப்பாளராக பல்வேறு இலக்கிய ஆவணங்களை சேகரித்து வைத்திருப்பதுடன்; அவ்வப்பொது இலக்கிய தகவல்களாக பத்திரிகைகளுக்கு எழுதியும் வருகிறார்.

இலக்கிய உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அயராது உழைத்துவரும் தெளிவத்தை ஜோசப்பின் இலக்கிய பங்களிப்புக்காக பல்வேறு பல்கலைகழகங்கள், இலக்கிய அமைப்புகள், பல விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளனன. 2013 ஆம் ஆண்டு தமிழகத்திலும் விஷ்ணுபுரம் விருது தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. கொடகே தேசிய சாகித்ய விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட்டுள்ள இவர் கலாசார அமைச்சின் ‘தேச நேத்ரு’ விருதுக்கும் உரியரானார்.

தனது இரண்டாவது சிறுகதை தொகுப்புக்காகவும் 2013 ஆம் ஆண்டு தேசிய சாகத்திய பரிசு பெற்றவர் மொத்தமாக மூன்றுமுறை சாகித்ய விருதினை வென்றுள்ளதுடன். இலங்கையின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்ய ரத்னா விருது (2014) வென்ற முதல் மலையகத் தமிழராகவும் தெளிவ்ததை ஜேசாப் விளங்குகின்றார்.

இலங்கையில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் தமிழ் சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்படும் தெளிவத்தை ஜோசப் எழுதிய நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 எனும் புதினத்துக்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து கரிகாற்சோழன் விருது வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

தகவல் – மல்லியப்பு சந்தி திலகரின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here