திபெத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 95 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாள நாட்டின் லெபுசே என்ற நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்பு வட இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக பீகார், புதுடில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டது.