97.5 கிலோகிராம் எடைகொண்ட மலைப்பாம்பு கண்டுபிடிப்பு

0
220

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள எவர்கிளேட்ஸ் பின் பிளட்வுட்ஸ் வனத்தில் ஆராய்ச்சிக் குழுவொன்று 97.5 கிலோகிராம் எடைகொண்ட மலைப்பாம்பைக் கண்டுபிடித்துள்ளது.

புளோரிடாவில் கண்டுபிடிக்கப்பட்ட பர்மிய ரக மலைப்பாம்பு இதுவாகும். அந்தப் பாம்பின் உடலில் 122 பாம்பு முட்டைகள் இருந்ததாக நியுயொர்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.

ஆராய்ச்சிக் குழு வேறொரு ஆண் பாம்பின் உடலில் தடம்தேடும் சாதனத்தைப் பொருத்தி அதைப் பின்தொடர்ந்தது. அதன் மூலம் 97.5 கிலோகிராம் எடைகொண்ட பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மலைப்பாம்பு ஆராய்ச்சியாளர்களில் ஒருவரின் முகத்தை வாலால் தாக்கியதாகக் கூறப்பட்டது.

பர்மிய மலைப்பாம்புகள் தென்கிழக்காசியாவைச் சேர்ந்தவை. அத்தகைய பாம்புகள் புளோரிடா சுற்றுச்சூழலில் விடுவிக்கப்பட்டால் அங்கு வளரும், வாழும் பூர்விகத் தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றின் வாழ்வு பெரிய அளவில் பாதிக்கப்படக்கூடும்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here